எம்.எல்.ஏ.,க்களுக்கு ரூ.100 கோடி லஞ்சம்! திக்விஜய் சிங் பகீர் புகார் 

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 11:18 am
rs-100-cr-bribe-to-mla-s

 

மத்திய பிரதேசத்தில், புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டெடுப்பு, அந்த மாநில சட்டசபையில் இன்று நடக்கிறது. 

இந்த தேர்தலில், தங்கள் கட்சி வேட்பாளருக்கு சாதகமாக ஓட்டளிக்க, சுயேட்சை எம்.எல்.ஏ.,க்களுக்கு, 100 கோடி ரூபாய் லஞ்சம் தரும் முயற்சியில் பா.ஜ.,  ஈடுபட்டுள்ளதாக, காங்., மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார். 

இதுவரை இல்லாத வகையில், அந்த மாநில சட்டசபையில், பா.ஜ.,  பலமான எதிர்க் கட்சியாக உருவாகியிருப்பதால், 52 ஆண்டுகளுக்குப் பின், ஓட்டெடுப்பு நடத்தி, சபாநாயகரை தேர்வு செய்யும் சூழல் உருவாகியுள்ளது. 

230 உறுப்பினர்கள் உள்ள  மத்திய பிரதேச மாநில சட்டசபையில், காங்., - 114; பா.ஜ., - 109; சுயேட்சை- 4; பகுஜன் சமாஜ் - 2 மற்றும் சமாஜ்வாதிக்கு 1 என்ற எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close