காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே கூட்டணி உடன்பாடு?

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 12:43 pm
aap-congress-came-to-consensus-seat-sharing-in-delhi

டெல்லியில் ஆளும் ஆத்மி ஆத்மி கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் தலா 3 தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் மொத்தம் 7 தொகுதிகள் உள்ளன. மீதமுள்ள ஒரு தொகுதியில் பா.ஜ.க.வில் இருந்து வெளியேறிய அதிருப்தி தலைவர் யஸ்வந்த் சின்ஹா போட்டியிட அக்கட்சிகள் ஆதரவளிக்கும் என்று தெரிகிறது.

பிரதமர் நரேந்திர மோடியை வீழ்த்துவதற்காக எந்தக் கட்சிக்கும் ஆதரவளிக்கத் தயார் என்று கெஜ்ரிவால் முன்பு கூறியிருந்தார். அதேபோல காங்கிரஸ் கட்சியின் மேலிடமும் கெஜ்ரிவாலுடன் கூட்டணி வைக்கத் தயாரானது. ஆனால், இந்த கூட்டணி அமைவது பிடிக்காத காரணத்தினால் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் அண்மையில் தனது பதவியை ராஜிநாமா செய்தார். கட்சியை தான் பலப்படுத்தியிருக்கும் நிலையில், தனித்துப் போட்டியிடலாம் என அவர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அதேபோன்று ஆம் ஆத்மி கட்சிக்கு கணிசமான வாக்கு சதவீதம் உள்ள பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close