மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு!!

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 12:36 pm
chandrababu-naidu-met-with-opposition-leaders-in-delhi

மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியை மேற்கொண்டு வரும் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லியில் நேற்று பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதற்கு முன்பு, கடந்த நவம்பர் மாதத்திலும் எதிர்க்கட்சித் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசியிருந்த நிலையில், இது இரண்டாவது சந்திப்பாகும்.

குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். முன்னதாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை கண்டு கொள்ளாமல், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி வைத்தன. இந்தச் சூழலில், பிற கட்சிகளின் தலைவர்களை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசியுள்ளார்.

இதற்கிடையே, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் மாபெரும் பேரணி ஒன்றை வரும் 19ம் தேதி நடத்துகிறார். அதில், கலந்து கொள்ளுமாறு அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அவர் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்த நிலையில், சந்திரபாபு நாயுடு, சரத் பவார் ஆகிய தலைவர்கள் பேரணியில் பங்கேற்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close