‘பாரத் பந்த்’ பின்னணியில் ராகுல் காந்தி!!

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 11:42 am
rahul-gandhi-acts-behind-the-bharat-bandh-for-political-gains

நாடெங்கிலும் மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் இரண்டு நாள் ‘பாரத் பந்த்’ பின்னணியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் தூண்டுதல் இருப்பதாகக் கருதப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக அவர் இதை முன்னெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

அகில இந்திய வர்த்தக காங்கிரஸ் தலைவர் சஞ்சீவ ரெட்டிக்கு, கடந்த டிசம்பர் மாதம் ராகுல் காந்தி எழுதியாகக்  கூறப்படும் கடிதத்தை ‘ரிபப்ளிக் டிவி’ வெளியிட்டுள்ளது. அதில் வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்னை, ஜிஎஸ்டி வரி அமலானதால் ஏற்பட்ட பாதிப்புகள் போன்ற விஷயங்களை சுட்டிக் காட்டிய ராகுல் காந்தி, இதை வைத்து வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்குப் பதில் அளித்து சஞ்சீவ ரெட்டி எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில், ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் பாரத் பந்த் நடைபெறும் என்றும், அதற்கு தார்மிக ஆதரவை வழங்குவதன் மூலமாக நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பலனடைய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், அகில வர்த்தக காங்கிரஸ் மற்றும் பிற தொழிற்சங்கங்கள் இணைந்து நாடு தழுவிய பந்த் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் இதற்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை என்றாலும், கர்நாடகம், மேற்கு வங்கம், கேரளா, ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் போக்குவரத்து பாதிப்பு, வங்கிச் சேவைகள் முடக்கம் போன்ற இன்னல்களுக்கு பொதுமக்கள் ஆளாகியுள்ளனர்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close