என் பிள்ளைகளின் கேள்விக்கு பதில் தருகிறது இடஒதுக்கீடு மசோதா

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 12:24 pm
quota-bill-answers-the-question-raised-by-our-kids-sumitra-mahajan

பொதுப்பிரிவு மக்களில் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் மக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நேற்றிரவு நிறைவேற்றப்பட்டது குறித்து அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். நீண்டகாலமாக தனது பிள்ளைகள் எழுப்பி வந்த கேள்விக்கு விடை கிடைத்திருப்பதாகக் கூறியுள்ளார் அவர்.

இதுகுறித்து சுமித்ரா மகாஜன் கூறும்போது, “நான் மகிழ்ச்சியாக உணருகிறேன். ஜாதிரீதியாக மட்டும்தான் இடஒதுக்கீடு அளிக்கப்படுமா? பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் நம்மைப் போன்றவர்களின் நிலை என்ன? என்று எனது பிள்ளைகள் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், பல கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்கிறது. இந்த மசோதா நீண்ட கால அடிப்படையில் பலன் தரும்’’ என்றார்.

மக்களவையில் இந்த மசோதா மீது நேற்றிரவு நான்கரை மணி நேரம் விவாதம் நடைபெற்றது. இறுதியில் 330 எம்.பி.க்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. அரசு மற்றும் தனியார் சார்ந்த கல்வி நிலையங்கள், அரசு வேலைவாய்ப்புகள் ஆகியவற்றில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அந்த மசோதா வழிவகை செய்கிறது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close