பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது - நவீன் பட்நாயக்

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 01:45 pm
no-alliance-with-either-bjp-nor-congress-naveen-patnaiak

ஒடிஸா மாநிலத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் என எந்தக் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்று ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முதல்வருமான நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

இந்த மாநிலத்தில் 21 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. பிஜு ஜனதா தளம் கட்சி காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி அல்லது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையக் கூடும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், பிஜு ஜனதா தளம் கட்சியினர் டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் நவீன் பட்நாயக் கலந்துகொண்டார்.

அதே சமயம், நாடு முழுவதிலும் எதிர்க்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் நடத்தும் இரண்டு நாள் பாரத் பந்த் போராட்டத்துக்கு பிஜு ஜனதா தளம் கட்சியைச் சார்ந்த தொழிற்சங்கமும் ஆதரவு தெரிவித்தது. இதனால், எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பிஜு ஜனதா தளம் கட்சி இணையும் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியது.

ஆனால், மகா கூட்டணி உள்பட எந்த அணியிலும் பிஜு ஜனதா தளம் இணையாது என்றும், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இடைவெளியை கடைப்பிடிக்கவே நாங்கள் விரும்புகிறோம் என்றும் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close