‛நமோ’ வாசகத்துடன் உடையணிந்த அனுராக் தாக்குர்

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 03:04 pm
namo-t-shirt-goes-viral

 

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த, பாராளுமன்ற உறுப்பினர் அனுராக் தாக்குர், ‛நமோ அகய்ன்’ என்ற வாசகம் அடங்கிய டீ சர்ட் அணிந்து பார்லிமென்ட் வளாகத்தில் காணப்பட்டார். 
அவரின் இந்த வித்தியாசமான செயல், பிரதமர் மோடி, அரசியல் கட்சியினரை வியப்பில் ஆழ்த்தியது. இதனால், மகிழ்ச்சி அடைந்த மோடி,  அனுராக் தாக்குருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 
அனுராக் தாக்குரின் படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. 
இது குறித்து அவர் கூறுகையில், ‛சிறந்த வகையில் நாட்டை ஆட்சி செய்து வரும் பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என நினைக்கிறேன். என் விருப்பத்தை வெளிப்படுத்தும் வகையில் இவ்வாறு செய்தேன். மக்களின் விருப்பமும் அதுதான்’ என தாக்குர் கூறினார். 
பிரதமர் நரேந்திர மாேடியை, அவரது ஆதரவாளர்கள், ‛நமாே’ என சுருக்கமாக அழைப்பது வழக்கம்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close