குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து அசாம் அமைச்சர்கள் 3 பேர் ராஜினாமா!

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 08:56 pm
three-agp-ministers-quit-after-citizenship-amendment-bill

2016ம் ஆண்டு குடியுரிமை சட்டத் திருத்தத்தை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு நிறைவேற்றியதை தொடர்ந்து, அதை கடுமையாக எதிர்த்து வந்த அசாம் கன பரிஷத் கட்சியை சேர்ந்த மூன்று அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய இஸ்லாமிய நாடுகளில் இருந்து, இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்த இஸ்லாமியர் அல்லாத மற்ற மதத்தை சார்ந்தவர்களுக்கு, இந்திய குடியுரிமை வழங்கும் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் கீழ் சபையில் இந்த சட்டம் நிறைவேறியது.

அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அசாம் கன பரிஷத் என்ற பாரதிய ஜனதா கூட்டணி கட்சி, கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அக்கட்சியின் தலைவரும் அசாம் மாநில விவசாயத் துறை அமைச்சருமான அதுல் போரா, நீர்வளத்துறை அமைச்சர் கேசப் மஹந்தா, உணவுத்துறை அமைச்சர் பானி பூஷன் சவுத்ரி ஆகியோர் அசாம் முதல்வர் சோனோவாலை சந்தித்தனர். 25 நிமிடங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு, கூட்டணியிலிருந்து விலகுவதாக தெரிவித்து, தங்களது அமைச்சர் பதவியையும் மூவரும் ராஜினாமா செய்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close