மம்தா கட்சியின் எம்.பி. பா.ஜ.க.வில் இணைந்தார்

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 11:20 am
ayodhya-case-judge-rescuses-himself-from-hearing-case-adjourned

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சௌமித்ரா கான் என்ற எம்.பி. நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார். இதற்கிடையே, சௌமித்ரா கானின் உதவியாளரை ஆயுதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்தது.

டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் ராகுல் சின்ஹா, மூத்த தலைவர் முகுல் ராய் ஆகியோர் முன்னிலையில் சௌமித்ரா கான் பா.ஜ.க.வில் இணைந்தார். இதில் முகுல் ராய் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் மிகுந்த செல்வாக்கு உடைய தலைவராக இருந்தவர். அவர் கடந்த 2017ம் ஆண்டில் பா.ஜ.க.வில் இணைந்தார். தற்போது புதிய வரவாக சேர்ந்திருக்கும் சௌமித்ரா கான் இதுகுறித்து பேசும்போது, மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. ரௌடிகளை அரசு ஊக்குவிக்கிறது என்று தெரிவித்தார்.

பா.ஜ.க.வில் சேர்ந்ததையடுத்து அவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, கட்சிக்கு விரோதமாக சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் கருத்து வெளியிட்டதாகக் கூறி மற்றொரு எம்.பி.யான அனுபம் ஹஸ்ராவும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close