ராகுல் காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 12:45 pm
national-women-commission-send-notice-to-ragul-gandhi

பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியது குறித்து விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் அண்மையில் விவாதம் நடைபெற்றபோது, பல்வேறு கேள்விகளை முன்வைத்த ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி அதற்கு பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்து, மத்திய அரசு தரப்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரஃபேல் ஒப்பந்தம் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்தார். 

இந்நிலையில், ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தி பேசும்போது, பிரதமர் நாடாளுமன்றத்தை விட்டு ஓடி விட்டார். ’என்னைக் காப்பாற்றிக் கொள்ள வழியில்லை. நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று பெண் அமைச்சர் ஒருவரிடம் கெஞ்சினார். ஆனால், அந்த பெண்மணியால், அவரை குற்றச்சாட்டில் இருந்து காப்பாற்ற முடியவில்லை என்றார். 

இதற்கு மோடி உடனடியாக பதிலடி கொடுத்தபோது, பெண் அமைச்சரை சிலர் அவமதித்துவிட்டதாகக் கூறியிருந்தார். பின்னர் டுவிட்டரில் ராகுல் காந்தி பதிவிட்டதில், “மரியாதைக்குரிய மோடி அவர்களே. பெண்களுக்கான மரியாதை வீடுகளில் தொடங்குகிறது. நீங்கள் ஆண் போல இருக்க வேண்டும். ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் தன்னிச்சையான முடிவை எடுத்தீர்களா, இல்லையா? அதற்கு பதில் அளிக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து ராகுல் காந்திக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெண்களின் தரத்தை குறைத்து மதிப்பிடும் வகையிலான கருத்தை முன்வைப்பதன் மூலமாக ராகுல் காந்தி என்ன சொல்ல வருகிறார் என்று அந்த ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close