நாட்டின் பெண்களை ராகுல் அவமதித்துவிட்டார்: மோடி ஆவேசம்

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 01:55 pm
modi-slams-rahul-for-his-remarks-on-women

 

நாட்டின் பாதுகாப்பிற்காக, ரபேல் ரக போர் விமானங்களை வாங்குவது குறித்த ஒப்பந்தம், இந்தியா - பிரான்ஸ் இடையே கையெழுத்தாகியுள்ளது. இதில், மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு ஊழல் செய்துள்ளதாக, காங்., தலைவர் ராகுல் குற்றம் சாட்டி வருகிறார். 
அரவது குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில், ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் நீண்ட உரையாற்றினார். அதில், ஒப்பந்தம் குறித்த பல்வேறு புள்ளி விபரங்களையும் வெளியிட்டு விளக்கமாக பேசினார்.

இது குறித்து கிண்டல் அடித்துள்ள ராகுல், பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவாக விமர்சித்தார். 

‛என் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாததால், பிரதமர் மோடி, ராணுவ அமைச்சர் நிர்மலாவின் பின் ஒழிந்து கொண்டார். தன்னை காப்பாற்றும் படி, ஒரு பெண்ணிடம் கெஞ்சினார். அமைச்சர் நிர்மலா எவ்வளவோ முயன்றும், என் கேள்விக்கு அவரால் பதில் அளிக்க முடியவில்லை. மோடி அவர்களே, ஒரு ஆண் மகனாக நடந்து கொள்ளுங்கள்; நம் நாட்டில் பெண்களின் மரியாதை வீட்டில் துவங்குகிறது. பெண்ணின் பின் ஒழிந்து கொள்ளாமல், ரபேல் ஊழல் குறித்து வாய் திறங்கள்’ என கருத்து தெரிவித்திருந்தார்.

ராகுலின் கருத்துக்கு, பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராணுவ அமைச்சரைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளதன் மூலம், நாட்டின் ஒட்டு மொத்த பெண்களையும் ராகுல் அவமதித்துள்ளதாக, மோடி கருத்து தெரிவித்துள்ளார். ராகுலின் இந்த பேச்சு, ஒட்டு மொத்த பெண் இனத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என்றும் தெரிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close