பதவியை உதறிய அதிகாரிக்கு ப.சிதம்பரம் பாராட்டு

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 02:34 pm
p-chidambaram-welcomes-sha-faesal

 

ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த காஷ்மீரை சேர்ந்த, ஷா பைசல், தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அரசிலயில் ஈடுபடப்பாேவதாக அறிவித்துள்ளார். 

அவரது முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ள,காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பைசலின் முடிவுக்கு, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசே காரணம் என தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து, ப.சிதம்பரம் மேலும் கூறுகையில், ‛காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதில், மத்திய அரசு விம்புவதில்லை. அங்கு நடக்கும் கலவரத்தால், அப்பாவிகள் பலர் உயிரிழக்கின்றனர். பைசல் ஷாவின் முயற்சியை வரவேற்கிறேன். ஆனால், மத்திய அரசு பற்றிய அவரது கருத்து கவனிக்கத்தக்கது’ என்றார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close