10 சதவீத இட ஒதுக்கீட்டால் உண்மையில் யாருக்கு பாதிப்பு?

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 05:03 pm
article-on-reservation-bill

 
நாட்டில், அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்திற்காக, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், ஜாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும், அங்கு வசிக்கும் எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் இதர பிற்பட்டோர் பிரிவில் உள்ளோருக்கு, அந்தந்த மாநில அரசுகள் நிர்ணயித்துள்ள சதவீத அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில், தற்போது, ஜாதி ரீதியிலான இட ஒதுக்கீடு, 69 சதவீதமாக உள்ளது. இதில், பி.சி., எனப்படும் பிற்படுத்தப்பட்டோர், எம்.பி.சி., எனப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எனப்படும், பட்டியல் இனத்தினர், எஸ்.டி., எனப்படும் பழங்குடியினர் ஆகியோர் பலனடைந்து வருகின்றனர்.


மீதமுள்ள, 31 சதவீதத்தில், இட ஒதுக்கீட்டு பட்டியலில் இடம் பெறாத, பொதுப் பிரிவை சேர்ந்தோர், உட்பட அனைத்து பிரிவினரும், பொதுப் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.

 
நாட்டின் பிற மாநிலங்களில், இந்த சதவீதத்தின் அளவு, வெவ்வேறாக உள்ளது. இந்நிலையில், பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தும், ஜாதி ரீதியிலான ஒதுக்கீட்டு பட்டியலில் இடம் பெறாததால், பொதுப் பிரிவை சேர்ந்த ஏழைகள், முன்னேற முடியாத நிலை இருந்து வருகிறது..

 
எனவே, எவ்வித இட ஒதுக்கீடும் பெறாத, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோருக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க, மத்திய அரசு முன் வந்துள்ளது. இதற்கான சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரண்டு அவைகளிலும், தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் மற்றும் பிற மாநில கட்சிகளின் பேராதரவுடன் நிறைவேறியுள்ளது.

ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பின், இது சட்ட வடிவம் பெற்று அமலுக்கு வரும்.


புதிய இட ஒதுக்கீட்டு சட்டத்தின் மூலம், இதுவரை இட ஒதுக்கீடு பெற்று வரும் எந்த பிரிவினருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதை, மத்திய அரசு தெளிவாக விளக்கியுள்ளது.


ஓ.பி.சி., -எஸ்.சி.,- எஸ்.டி., பிரிவினருக்கான இட ஒதுக்கீடு எப்போதும் போல் தொடரும்.


மாறாக, பொதுப்பிரிவிலிருந்து, 10 சதவீதம், பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால், பொருளாதாரத்தில் முன்னேறிய, எந்த ஒதுக்கீட்டு பிரிவிலும் இல்லாத பொதுப் பிரிவினரே பாதிக்கப்படுவர். அவர்களுக்கான போட்டி மேலும் அதிகரிக்கும்.


எனவே, தமிழக அரசியல் தலைவர்கள் கூறி வருவது போல், இந்த மசோவால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. உண்மையை சொல்லப்போனால், புதிய சட்ட திருத்தத்தால், ஏற்கனவே எந்த சலுகையும் பெறாத, பொருளாதாரத்தில் முன்னேறிய, பொதுப் பிரிவினருக்கு தான் சற்று போட்டியை அதிகரிக்கும்.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close