ராகுல் காந்திக்கு ஆதரவாக எழுந்த பிரகாஷ்ராஜ்

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 11:41 pm
prakash-raj-defence-rahul-gandhi-controversial-comments

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமனின் பின்னால் ஒளிந்து கொள்வதாக ராகுல் காந்தி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அரசியலில் இறங்கியுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

ரஃபேல் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் காரசார விவாதத்தில் ஈடுபட்டார். அப்போது நிர்மலா சீதாராமன் கூறிய பல்வேறு கருத்துக்கள் தவறானவை என்றும், தேசத்தை தவறாக வழிநடத்துவதாகவும் அவர் மீது காங்கிரஸ் தரப்பில் உரிமை மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை ராகுல் காந்தி ரஃபேல் விவகாரம் தொடர்பாக தொடர்ந்து தாக்கி பேசிவரும் நிலையில், பிரதமர் மோடி தன்னிடம் நேரடியாக விவாதிக்க பயந்துகொண்டு, ஒரு பெண்ணின் (நிர்மலா சீதாராமன்) பின்னால் ஒளிந்து கொண்டதாக சமீபத்தில் தெரிவித்தார்.

இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. ராகுல்காந்திக்கு எதிராக தேசிய பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், ராகுல், பெண்களுக்கு எதிரானவர் அல்ல, என அவருக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் "உண்மை என்னவென்றால் பிரதமர் மோடி, ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஒளிந்து கொண்டார் என்பது தான். பிரதமர் ஒளிந்துகொண்டதை பிரச்னை ஆக்குங்கள். ராகுல்காந்தி பெண்களுக்கு எதிரானவர் அல்ல. சமீபத்தில்தான் அவர் காங்கிரஸ் கட்சியில் பொதுச்செயலாளர் பதவியில் ஒரு திருநங்கையை நியமித்தார். அதையும் நாம் பார்க்க வேண்டும்" என கூறினார்

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close