பா.ஜ.க.வின் தேசிய மாநாடு இன்று தொடக்கம்

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 09:45 am
bjp-national-council-meeting-from-today

பா.ஜ.க.வின் தேசிய அளவிலான மாநாடு டெல்லியில் இன்று தொடங்கி இரண்டு நாள்களுக்கு நடைபெறவுள்ளது. நாடெங்கிலும் இருந்து அக்கட்சியின் 1,200க்கும் மேற்பட்ட தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவின் உரையுடன் மாநாடு தொடங்குகிறது. இறுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையுடன் மாநாடு நிறைவு பெறும். கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 18,19 ஆகிய தேதிகளில் இதேபோன்ற மாநாட்டை டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் பா.ஜ.க. நடத்தியது. தற்போது நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு அதே இடத்தில் அக்கட்சி மீண்டும் மாநாடு நடத்துகிறது.  இதில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான யுக்திகள் குறித்து கட்சியின் நிர்வாகிகளுக்கு எடுத்துரைக்கப்படும் எனத் தெரிகிறது.

மத்திய அரசு மேற்கொண்ட சமூக நலத் திட்டங்கள், பொதுப்பிரிவில் நலிவடைந்தோருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்களை பாராட்டி பா.ஜ.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படவிருக்கிறது. அதேபோன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் கொண்டு வரப்படவுள்ளதாக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close