மாயாவதி - அகிலேஷ் யாதவ் கூட்டணி குறித்து நாளை அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 10:54 am

akilesh-mayawati-alliance-to-be-announced-formally-tomorrow

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் ஆகிய இரு கட்சிகளின் கூட்டணி குறித்து நாளை முறைப்படி அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வை எதிர்த்து வலுவான அணியாக களமிறங்கும், இந்த இரு கட்சிகளும் 25 ஆண்டுகளுக்குப் பின் கூட்டணி சேர்ந்துள்ளன. இதற்கு முன்பு சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனத் தலைவர் கன்ஷிராமும், பா.ஜ.க.வுக்கு எதிராக கூட்டணி வைத்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் முலாயம் - கன்ஷிராம் கூட்டணி  அமோக வெற்றி பெற்றது.

இந்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் அணி சேருகின்றன. முன்னதாக, காங்கிரஸ் அணியில் இவ்விரு கட்சிகளும் சேரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கட்சியை புறக்கணித்துவிட்டு அகிலேஷ் யாதவும், மாயாவதியும் கூட்டணி சேர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. 

newstm.in
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.