ரபேல் ஒப்பந்தம்: ராகுலுக்கு பாடம் நடத்திய 8 வயது சிறுமி

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 11:34 am
8-year-girl-explains-about-rafale

 

நாட்டின் பாதுகாப்பு கருதி, பிரான்ஸ் அரசுடன், மத்திய அரசு மேற்கொண்டுள்ள ரபேல் பாேர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. 

இந்நிலையில், இரண்டு பென்சில் பாக்ஸ்களை வைத்து, ரபேல் போர் விமானத்தின் விலை குறித்து விளக்கும், 8 வயது சிறுமியின் வீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

ரபேல் விமானத்தின் விலை குறித்து, விளக்கம் அளிக்கும் சிறுமி, ‛ராகுல் கூறும் விமானம், எந்த பொருளும் இல்லாத வெறும் பென்சில் பாக்ஸ் போன்றது. 

வெறும் விமானத்தின் விலை, 720 கோடி ரூபாய். அதே சமயம், பிரதமர் மோடி கூறும் விமானம், பென்சில், பேனா, ஸ்கேல் உள்ளிட்ட அனைத்து முக்கிய பொருட்கள் அடங்கிய பென்சில் பாக்சிற்கு சமம். 

மோடி கூறும் விமானம், போரில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களுடன் கூடியது. அதன் விலை,1,600 கோடி ரூபாய்’ என,
 அந்த சிறுமி விளக்கம் அளித்துள்ளார். 


சிறுமியின் வீடியோ பதிவை, தன் டுவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ள, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்த சிறுமிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 

இந்த வீடியோவை, கீழ்கண்ட ‛லிங்க்’கை கிளிக் செய்து பார்க்கலாம்.

https://twitter.com/_VandeMaataram/status/1082967074303967233

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close