ஊழல்தான் காங்கிரஸ் ஆட்சியின் சாதனை :நிதின் கட்கரி

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 01:27 pm
corruption-were-the-feature-of-the-previous-congress-govt-kadkari

நிர்வாக திறமையின்மையும், ஊழலும்தான் காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளாக இருந்தன என்று மத்தியமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.

பாஜகவின் இரண்டு நாள் தேசிய மாநாடு, தில்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மத்தியமைச்சர் நிதின் கட்கரி பேசும்போது, "நிர்வாக திறமையின்மையும், ஊழலும்தான் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளாக இருந்தன.

ஆனால், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் அரசு நிர்வாகத்தில் நேர்மை கடைப்பிடிக்கபட்டவருகிறது. பல்வேறு தொழில்களுக்கான வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டு, கடந்த நாலரை ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று நிதின் கட்கரி உரையாற்றியுள்ளார்.

இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close