பாஜக ஆட்சியில் தீவிரவாதத்துக்கு இடமில்லை: நிர்மலா சீதாராமன்

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 02:21 pm
pm-modi-has-ensured-one-thing-that-there-shall-not-be-an-opportunity-for-terrorists-nirmala-sita-raman

பாஜக ஆட்சியில் தீவிரவாதத்துக்கு துளியும் இடமில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

இதுதொடர்பாக டெல்லியில் நடைபெற்றுவரும் பாஜக தேசிய மாநாட்டில் அவர் மேலும் பேசியது: மத்திய பாஜக அரசு பயங்கரவாதம்,  தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்பதில் உறுதி பூண்டுள்ளது. எனவேதான்,  2014 -ஆம் ஆண்டுக்கு பிறகு பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

மேலும், மோடி தலைமையிலான பாஜக அரசு, நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் தீவிரவாதத்துக்கு துளியும் இடமளிக்காமல், நாட்டில் அமைதி சூழலை உறுதிப்படுத்தியுள்ளது என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close