1.5 ஆண்டுகளில் 18 லட்சம் பேருக்கு வீடு: யோகி ஆதித்யநாத் பெருமிதம்

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 03:00 pm
18-lakh-houses-in-just-1-5-years-up-cm

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 18 லட்சம் ஏழைகளுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லி நடைபெற்றுவரும் பாஜக தேசிய மாநாட்டில் அவர் மேலும் பேசும்போது, "பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 18 லட்சம் ஏழைகளுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.

பயனாளிகளின் ஜாதி, மதம் எல்லாம் கருத்தில் கொள்ளப்படாமல் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆனால், முந்தைய சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் 5 ஆண்டுகளில் வெறும் 63,000 வீடுகள் தான் கட்டப்பட்டன" என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close