சட்டத்தை நம்பாதவர்களிடம் நாட்டை ஒப்படைக்க முடியுமா? மோடி ஆவேசம்

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 03:34 pm
pm-modi-slams-oppositions-at-bjp-nation-executive-meet

'நம் நாட்டு சட்டத்தின் மீதும், நீதித்துறை மீதும் நம்பிக்கை இல்லாதவர்களிடம், நம் நாட்டை ஆளும் பொறுப்பு வழங்க வேண்டும் என்கின்றனர். அவர்களை நம்பி எப்படி ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பது?' 
என பிரதமர் நரேந்திர மாேடி பேசினார்.

டில்லியில் நடந்து வரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இந்திய அரசியல் சாசன சட்டத்தின் மீது நம்பிக்கை அற்றவர்கள் காங்கிரசார். எந்த வழக்கையும், சட்ட ரீதியில் எதிர் கொள்ள அவர்களுக்கு தைரியம் கிடையாது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் நிலம், பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 
அது குறித்த வழக்கில் ஆஜராகும் படி நீதிமன்றம் சம்மன் அனுப்பியும், காங்கிரசை சேர்ந்த குடும்ப அரசியல்வாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராக மறுக்கின்றனர். மக்கள் பணம் களவு போயுள்ளது. ஆனால், இதுகுறித்து வாய்திறக்க மறுக்கின்றனர். 
நான் குஜராத் முதல்வராக இருந்த போது, ஒரு வழக்கு விசாரணை தொடர்பாக, காவல் நிலையம் செல்ல வேண்டியிருந்தது. முதல்வராக இருந்த நான், சாதாரண மாவட்ட அளவிலான போலீஸ் அதிகாரி முன்னிலையில், விசாரைணக்கு ஆஜரானேன். என்னிடம் ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
எனக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை இருந்தது. இன்றும் அதே நம்பிக்கை இருப்பதால் தான், எதிர்க்கும் அஞ்சுவதில்லை.

குஜராத்தில், என் தலைமையிலான ஆட்சி நடந்த போது, சி.பி.ஐ., அதிகாரிகள் உள்ளே வர எந்த தடையும் விதிக்கவில்லை. எங்கள் கையிலும் அதிகாரம் இருந்தது. அப்போது மத்தியில் காங்., ஆட்சி செய்தது. ஆனால்,சட்டத்தின் மீதும், நீதித்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்ததால், அவ்வாறு நடந்துகொள்ளவில்லை. 

இப்போது, ஆந்திராவிலும், மேற்கு வங்கத்திலும், சி.பி.ஐ.,யை உள்ளே நுழைய விடமாட்டோம் என அந்த மாநில முதல்வர்கள் கூறுகின்றனர். அவர்களுக்கும் சட்டத்தின் மீது நம்பிக்கை கிடையாது. 

நம் நாட்டு சட்டத்தின் மீதும், நீதித்துறை மீதும் நம்பிக்கை இல்லாதவர்களிடம், நம் நாட்டை ஆளும் பொறுப்பு வழங்க வேண்டும் என்கின்றனர். அவர்களை நம்பி எப்படி ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பது. 

டோக்லாம் பிரச்னையின் போது, ராணுவத்தையும், மத்திய அரசையும் கிண்டல் செய்தனர். எல்லை தாண்டி சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்த போது, அதை பொய் என்றனர். ராணுவத்தையே நம்பாத இவர்களை நம்பி, நாட்டை ஒப்படைக்க முடியுமா?

நம் வீட்டில் ஒரு வேலை ஆளை பணியமர்த்தும் போது, அவர் நம்பிக்கைக்கு உரியவரா என, எத்தனை முறை யோசிக்கிறோம், நாட்டின் தலைமை சேவகனை தேர்ந்தெடுப்பதில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும். காங்கிரசை ஆதரித்த சிலர், தற்போது அந்த கட்சிக்கு எதிராக கூட்டணி அமைக்கின்றனர். காங்கிரஸ் செய்த தவறுகளில் அவர்களுக்கும் பங்கு உண்டு என்பதை மறைக்க முற்படுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close