தேர்தல் தோல்வி என்றால் என்னவென்று ஊடகங்களுக்கு புரிய வைப்போம் - அமித் ஷா

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 04:48 pm
we-will-teach-media-what-is-called-poll-defeat-amit-shah

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியைத்தான் இழந்ததே தவிர தோல்வி அடைந்துவிடவில்லை என்று பா.ஜ.க. தலைவர் அமித் ஷா தெரிவித்தார். உண்மையான தேர்தல் தோல்வி என்னவென்பதை ஊடகங்களுக்கு புரிய வைப்போம் என்றும் அவர் கூறினார்.

பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்றும், இன்றும் நடைபெற்றது. அதில் அமித் ஷா இன்று பேசியபோது, பா.ஜ.க. ஆட்சியில் இருந்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது குறித்து குறிப்பிட்டார். அவர் பேசியதாவது:

அண்மையில் நடந்த மூன்று மாநில தேர்தல் முடிவுகள் நல்லவிதமாக அமையவில்லை. தேர்தலில் நமது எதிரிகள் வேண்டுமானால் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், நாம் தோல்வி அடைந்துவிடவில்லை என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால், இந்த மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க. தனது அடித்தளத்தை இழந்துவிடவில்லை. ஆகவே, நமது தொண்டர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

நமது தோல்வி குறித்து ஊடகங்கள் விவாதிக்கலாம். ஆனால், உண்மையான தோல்வி என்னவென்பதை நாம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். உத்தரப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றபோது காங்கிரஸ் கட்சி சுத்தமாக துடைத்து எறியப்பட்டது. அக்கட்சியை பைனாகுலரை கொண்டு தேடும் நிலை ஏற்பட்டது என்றார் அமித் ஷா. 
newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close