மாயாவதி பிரதமரானால் மகிழ்ச்சி: அகிலேஷ் 

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 05:05 pm
akilesh-wants-to-mayawati-become-the-pm-of-india

 


வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, மாயாவதி பிரதமரானால், நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள, 80 லாேக்சபா தொகுதிகளில், அகிலேஷின் சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள், கூட்டணி அமைத்து, தலா, 38 இடங்களில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், செய்தியாளர்களிடம் பேசுகையில், உத்தர பிரேதசத்திலிருந்து இதுவரை பலர் பிரதமர் பதவிக்கு வந்துள்ளனர். அந்த வகையில், எனது தேர்வு யார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். தேர்தலில் வெற்றி பெற்றி, மாயாவதி பிரதமர் ஆனால், நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். என்றார்.

அகிலேஷின் இந்த பேச்சு, காங்கிரஸ் கட்சிக்கும், அதன் தலைவர் ராகுலுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close