உதவாக்கரை அரசை அமைக்க எதிர்க்கட்சிகள் முயற்சி - பிரதமர் மோடி விமர்சனம்

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 05:17 pm
opposition-parties-wants-to-for-majboor-govt-pm-modi

தேசிய அளவிலும், மாநில அளவிலும் பா.ஜ.க.வுக்கு எதிராக மகா கூட்டணி அமைக்க முயற்சித்து வரும் எதிர்க்கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார். உதவாக்கரை அரசை அமைப்பதற்காகவே அவர்கள் இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர் என்றார் அவர்.

டெல்லியில் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்றும், இன்றும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் நிறைவாக பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, பா.ஜ.க.வுக்கு எதிராக கூட்டணி அமைப்பது தோல்விக்குரிய முயற்சி என்று தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது:

ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில், பலமான அரசு இருக்க வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் நோக்கம். அதன்படி, பா.ஜ.க. மீண்டும் பலமான அரசை அமைக்கும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நாங்கள் உறுதி செய்வோம். ஆனால், இன்றைக்கு மகா கூட்டணி என்ற பெயரில் நாட்டில் தோல்விக்குரிய முயற்சி நடைபெற்று வருகிறது. உதவாக்கரை அரசை அமைப்பதற்காகவே அவர்களெல்லாம் ஒன்று கூடுகின்றனர். உதவாக்கரை அரசை அமைத்தால்தான், அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களின் தொழில்களுக்கு உதவ முடியும் என்று நினைக்கின்றனர். பலமான அரசு அமைந்தால் வேண்டப்பட்டவர்களின் தொழில் முடங்கி விடும் எனக் கருதுகின்றனர் என்றார் மோடி.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close