ஜனநாயகத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் இடையே போட்டி - காங்கிரஸ்

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 07:16 pm
parliament-poll-will-be-a-fight-between-dictorship-and-democracy-congress

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் இடையே போட்டி நிலவும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மகா கூட்டணி என்ற பெயரில் உதவாக்கரை அரசை அமைக்க எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியதற்கு பதிலடியாக காங்கிரஸ் கட்சி இதைத் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவார், டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் தங்கள் அரசின் மாபெரும் சாதனை என மோடி குறிப்பிடுவார். ஆனால், இன்று பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் 80 நிமிடம் உரையாற்றிய மோடி அதுகுறித்து ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை. கடந்த 2014ம் ஆண்டில் மோடி பேசியபோது, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 10 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால், அந்த வாக்குறுதி குறித்து அவர் ஏன் இன்று பேசவில்லை? விவசாயிகள் நாள்தோறும் போராடி வருவது ஏன் என்று இந்த தேசம் தெரிந்து கொள்ள விரும்புகிறது. வரலாறு குறித்து ஆதாரப்பூர்வமாக பேசுகிறோம் என மோடி நினைத்துக் கொள்கிறார். ஆனால், மோடி மற்றும் பா.ஜ.க.வினரின் நம்பிக்கையை பொருத்தவரையில் 2014இல் இருந்துதான் நாட்டின் வரலாறு தொடங்குகிறது என்றார் மணீஷ் திவாரி.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close