தேர்தல் கூட்டணிக்காக காங்கிரஸ் ஏங்கித் தவிக்கிறது: மோடி கிண்டல்

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 01:25 pm
congress-do-is-make-opportunist-alliances-with-parties-they-disliked-till-recently-and-still-do-perhaps-modi

மக்களவைத் தேர்தலில் தமது தலைமையில் எப்படியாவது கூட்டணி அமைந்துவிடாதா என காங்கிரஸ் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி கிண்டலாக கூறினார்.

வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, மயிலாடுதுறை, பெரம்பலூர், சிவகங்கை, தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளுடன், பிரதமர் மோடி  காணொலி காட்சி மூலம் இன்று கலந்துரையாடி வருகிறார்.

அப்போது அவர் பேசும்போது, " மோடி கெட்டவர் என்றும், மத்திய அரசின் மீதும் எப்படியாவது களங்கம் கற்பித்துவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கங்கணம் கட்டிக் கொண்டு திரிகின்றன. ஆனால், பாவம் அவர்களுக்கு மத்திய பாஜக அரசின் மீது பழி சுமத்த எந்த விஷயமும் கிடைக்கவில்லை.
எனவே, வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பிற கட்சிகளுடன்  சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து பாஜகவை தோற்கடித்துவிடலாம் என்று காங்கிரஸ் முழுமூச்சாக முயற்சித்து வருகின்றது. ஆனால், அந்த முயற்சியும் இதுவரை பலிக்கவில்லை.
இருப்பினும் தமது தலைமையில் தேர்தல் கூட்டணி அமைந்துவிடாதா என்று இன்னமும் காங்கிரஸ் ஏங்கித் தவித்து வருகிறது" என்று பிரதமர் மோடி கூறினார்.

அதிக எம்.பி. தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் மகாகூட்டணி அமைக்க காங்கிரஸ் முயற்சித்தது. 
ஆனால், அங்கு பிரதான இரு கட்சிகளான சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸை கூட்டணியில் சேர்க்காமல், தனியாக கைகோர்த்துள்ளன. இந்த நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close