வெற்று வாக்குறுதிகளை அளித்து இளைஞர்களை ஏமாற்ற முடியாது: மோடி

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 02:42 pm
first-time-voter-isn-t-interested-in-promises-he-is-interested-in-performance-modi

தேர்தலுக்காக வெற்று வாக்குறுதிகளை கொடுத்து, இன்றைய இளம் தலைமுறையினரை யாரும் ஏமாற்ற முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மக்களவைத் தேர்தலையொட்டி, மயிலாடுதுறை, பெரம்பலூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சியில் இன்று கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசும்போது, "தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கபோகும் இளைய சமுதாயத்தினர், குடும்ப அரசியலை கருத்தில் கொள்ளமாட்டார்கள். மாறாக நாட்டின் வளர்ச்சிக்காக  பாடுபடுபவர்களைதான் அவர்கள் கவனத்தில் கொள்வார்கள்.

 செயல் வீரர்களைதான் அவர்களுக்கு பிடிக்கும் என்பதால்,தேர்தலுக்காக வெற்று வாக்குறுதிகளை அளித்து இன்றைய இளம் தலைமுறையினரை யாரும் ஏமாற்றிவிட முடியாது.

அரசியலுக்காக அரங்கேற்றப்படும் நாடகங்களை கண்டுகொள்ள அவர்கள் தயாராக இல்லை. நாட்டுக்கு யார் நல்லது செய்கிறார்கள்? எனக் காண்பது மட்டுமே அவர்களின் அக்கறையாக உள்ளது.

முதல்முறை வாக்காளர்களின் தேர்வு பாஜகவாகதான் இருக்கும் என நம்புகிறேன். அவர்களின் வாக்குகளை பெற பாஜக நிர்வாகிகள் தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close