பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை 10% அதிகரிக்க வேண்டும் - மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 04:31 pm
central-minister-urges-to-increase-obc-quoto-to-extra-10

பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை மேலும் 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அதாவாலே வலியுறுத்தியுள்ளார். ‘தி சண்டே எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இதைக் கூறியுள்ளார். அந்தப் பேட்டியில் ராம்தாஸ் அதாவாலே கூறியிருப்பதாவது: 

பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை தற்போதிருக்கும் 27 சதவீதத்தில் இருந்து 37 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் இதை மேற்கொள்ள வேண்டும். பிற்படுத்தப்பட்ட சமூக மக்களில் மிகவும் வறுமை நிலையிலும், கல்வியில் பின்தங்கிய நிலையிலும் இருப்பவர்களுக்காக உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். 

பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும். இத்துடன் சேர்த்து மொத்த ஒதுக்கீடு 60 சதவீதமாக உள்ளது. அதில், பிற்படுத்தப்பட்டோருக்கு மேலும் 10 சதவீதம் அதிகரித்து மொத்தம் 70 சதவீதமாக இடஒதுக்கீட்டை அதிகரிக்கலாம். 75 சதவீதம் ஆனால் பெருவாரியான மக்கள் பயன்பெற முடியும் என்றார் அவர்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close