உத்தரப் பிரதேசம் - 13 இடங்களில் பிரச்சாரம் செய்கிறார் ராகுல் காந்தி

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 04:50 pm
rahul-gandhi-to-hold-13-rallies-uttar-pradesh-ahead-of-lok-sabha-polls

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் 13 இடங்களில் பிரசாரம் செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.

இங்கு அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸ் கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவ்விரு கட்சிகளும் தனி அணியாக களம் இறங்குவதாக அறிவித்துவிட்டன. இதனால், மொத்தமுள்ள 80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 13 மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டலமும் 6 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டவையாகும். இந்நிலையில், அந்த 13 மண்டலங்களிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அந்தப் பிரசாரப் பயணம் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் மாநில பொறுப்பாளர் ராஜ் பப்பார் ஆகியோர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகம் குறித்து இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close