1947ல் நடந்த தவறை சரி செய்யவே கர்தர்பூர் சாலை - மோடி

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 06:25 am
kartarpur-corridor-is-to-rectify-mistakes-of-1947

குரு கோபிந்த் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவரது நினைவு நாணயத்தை அறிமுகப்படுத்தி பேசியபோது, 1947ல் நடந்த தவறை சரிசெய்வதற்காக, கர்தர்பூர் சாலை அமைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

10வது சீக்கிய குருவான, குரு கோபிந்த் சிங்கின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அவரின் நினைவு நாணயம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "சீக்கிய குருக்கள் நீதியின் பக்கம் நிற்க வேண்டும் என கற்பித்தனர். அதனாலேயே நாங்கள் 1984 கலவரத்தில் இறந்தவர்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று கூறினார். 

மேலும், சீக்கிய பக்தர்களுக்காக இந்திய பாகிஸ்தான் எல்லையில் கர்தர்பூர் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, அந்த சாலையின் மூலம் 1947ல் செய்யப்பட்ட தவறுகளை சரிசெய்ய முயற்சித்துள்ளதாக தெரிவித்தார். 1947ல் எல்லைக்கு ஒரு சில கிலோமீட்டர்கள் அருகில் குருநானக் வாழ்ந்த குருத்வாரா தர்பார் சாஹிப்பை இந்தியா தவற விட்டதாகவும், அதைச் சரி செய்வதற்காக தற்போது சீக்கியர்கள் அங்கு சென்று வழிபட கர்தர்ப்பூர் சாலையை உருவாக்கியுள்ளதாகவும், மோடி தெரிவித்தார்.

Newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close