கூட்டணியில் சிவசேனா சேர்த்துக் கொள்ளப்படுமா? - சரத் பவார் பதில்

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 09:07 am
no-place-for-sivasena-in-congress-ncp-alliance-sharad-pawar

மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் சிவசேனா கட்சிக்கு இடம் உண்டா? என்ற கேள்விக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் பதில் அளித்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அவர், இதுகுறித்து கூறுகையில் தங்கள் கூட்டணியில் சிவசேனா இடம்பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.

மகாராஷ்டிரா மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் சிவசேனா இடம்பெற்றுள்ளது என்ற போதிலும், அரசையும், பிரதமர் மோடியையும் அக்கட்சி தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதனால், சிவசேனா அணி மாறுமா என்ற கேள்வி எழுந்தது. மற்றொரு புறம், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இடையேயான பாரம்பரியமான கூட்டணியை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இந்த மாநிலத்தில் மொத்தம் 48 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில், 40 தொகுதிகளை பிரித்துக் கொள்வது குறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள 8 தொகுதிகளுக்கு இழுபறி நீடிக்கிறது. அதை விரைவில் முடிவுக்கு கொண்டு வரும் வகையில் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சரத் பவார் தெரிவித்தார். அதே சமயம், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அடுத்த சில மாதங்களில் வரும் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து இதுவரை எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றார் அவர்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close