மாயாவதியுடன் லாலு மகன் சந்திப்பு - கூட்டணிக்கு வாழ்த்து

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 09:24 am
justice-a-k-sigri-turned-down-post-retirement-offer

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத்தின் மகனும், பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் நேற்று மாலையில் சந்தித்துப் பேசினார். 

அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியுடன் மாயாவதி அமைத்துள்ள புதிய கூட்டணிக்கு தேஜஸ்வி யாதவ் வாழ்த்து தெரிவித்தார். பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால், காங்கிரஸை சேர்த்துக் கொள்ளாத அகிலேஷ் யாதவ் - மாயாவதி கூட்டணிக்கு, தேஜஸ்வி யாதவ் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் மாயாவதியும், தேஜஸ்வி யாதவும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, தேஜஸ்வி யாதவ் கூறும்போது, “நாட்டில் ஒவ்வொருவரின் பார்வையும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீதுதான் உள்ளது. ஏனென்றால், டெல்லி சென்று மத்திய அரசைப் பிடிக்க நினைப்பவர்கள் உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களையும் வென்றாக வேண்டும். மேலும், அகிலேஷ் - மாயாவதி இடையிலான கூட்டணி நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. பெரும்பாலான மக்கள் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். ஜனவரி 15இல் பிறந்தாள் கொண்டாடும் மாயாவதிக்கு, முன்னதாகவே வாழ்த்துக் கூற வந்தேன்’’ என்றார் தேஜஸ்வி.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close