ஓய்வுக்கு பிறகான பணியை நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதி - காரணம் என்ன?

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 09:46 am
justice-a-k-sigri-turned-down-post-retirement-offer

உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி வரும் மார்ச் 6ம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ளார். அவருக்கு லண்டனில் உள்ள காமன்வெல்த் தீர்ப்பாய தலைவர் பதவியை வழங்க மத்திய அரசு முன்வந்தது. ஆனால், அவர் அப்பதவியை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான புகார் குறித்து முடிவெடுக்க பிரதமர் நரேந்திர மோடி, நீதிபதி சிக்ரி, காங்கிரஸ் மக்களவைக் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகிய மூவரைக் கொண்ட உயர்நிலைக் குழு அண்மையில் கூடி விவாதித்தது. இதில், பிரதமர் மோடியும், நீதிபதி சிக்ரியும் அலோக் வர்மாவை சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஒப்புதல் அளித்தனர். பெரும்பான்மை முடிவே இறுதியானது என்ற நிலையில், தீயணைப்பு துறைக்கு மாற்றப்பட்ட அலோக் வர்மா பின்னர் ராஜிநாமா செய்தார்.

முன்னதாக, பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் உள்ள 54 நாடுகளை அங்கமாகக் கொண்ட காமன்வெல்த் குறை தீர்ப்பாயத்தின் தலைவர் பதவிக்கு ஏ.கே.சிக்ரியை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக கடந்த டிசம்பர் மாதமே அவரது கருத்தை மத்திய அரசு கேட்டிருந்தது. இதற்கிடையே, அலோக் வர்மாவை பதவி நீக்கியது குறித்து அரசியல் ரீதியிலான விமர்சனங்கள் எழுந்தன. இதனால், ஓய்வுக்குப் பின்னர் காமன்வெல்த் தீர்ப்பாய தலைவர் பதவியை ஏற்கும் நியமனத்தை நீதிபதி சிக்ரி நிராகரித்துள்ளதாகவும், மத்திய அரசுக்கு இதுகுறித்து கடிதம் எழுதியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருந்ததால் அலோக் வர்மா சிபிஐயில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close