பொதுப்பிரிவில் 10% இடஒதுக்கீடு - முதலில் அமல்படுத்தியது குஜராத்

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 10:15 am
gujarat-first-state-to-implement-10-quota-from-today

பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நாட்டிலேயே முதன்முதலாக குஜராத் மாநிலம் இன்று முதல் அமல்படுத்தியுள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 124-ஆவது திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரின் இறுதியில் அந்த மசோதா முதலில் மக்களவையிலும், பின்னர் மாநிலங்களவையிலும் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. பொதுப்பிரிவில், பின்தங்கிய மக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழிவை செய்யும் அந்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த சனிக்கிழமை ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, மத்திய அரசும் அதை அரசிதழில் வெளியிட்டது.

இந்நிலையில், நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு சட்டத்தை நாட்டிலேயே முதல் மாநிலமாக குஜராத் இன்று முதல் அமல்படுத்தியுள்ளது. மகர சங்கிராந்தி திருநாளில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் மகிழ்ச்சி அடைவதாக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். குஜராத்தில் பொங்கல் திருநாள் மகர சங்கிராந்தி என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close