உரி, பதன்கோட் இந்தியாவில் இல்லையா?சிதம்பரம் கேள்வி

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 12:11 pm
chidambaram-slams-nirmala-over-her-speech-on-terrorism

 

'மத்தியில், பிரதமர் நரேந்திர மாேடி தலைமையிலான ஆட்சி அமைந்த பின், நாட்டில் எந்த ஒரு இடத்திலும், மிகப் பெரிய அளவிலான பயங்கரவாத சம்பவங்கள் நடக்கவில்லை' என, பா.ஜ.,வை சேர்ந்த, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். 
அவரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள, காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இந்த விகாரத்தில், நிர்மலா, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுகிறாரா என கேள்வி எழுப்பியுள்ளார். 

இது குறித்து, ப.சிதம்பரம், செய்தியாளர்களிடம் பேசுகையில், ‛‛பஞ்சாப் மாநிலம் பதன்கோட் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் உள்ள உரி ஆகிய இடங்களில், விமானப்படை, ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, அமைச்சர் நிர்மலா மறந்துவிட்டாரா?
பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தான் ராணுவத்தையும், அந்நாட்டு அரசையும், அவர் ஆதரிக்கிறாரா? மேற்கண்ட இரு இடங்களும், இந்தியாவில் தான் உள்ளன என்பதை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்,’’ என்றார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close