'கேக்' சம்பவத்தை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்குகின்றன: மாயாவதி

  Newstm Desk   | Last Modified : 18 Jan, 2019 07:46 am
mayawati-blames-media-on-cake-controversy

சமீபத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியின் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போது, கட்சியின் தொண்டர்கள் 'கேக்'குக்காக சண்டை போடுவது போன்ற வீடியோ வெளியான சர்ச்சையை, ஊடகங்கள் ஊதி பெரிதாக்குவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, சமீபத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் கூட்டணி அமைத்தார். நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் சேர்ந்து போட்டியிடவுள்ளதாக தெரிவித்தனர். இந்நிலையில், மாயாவதியின் 63வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சமீபத்தில் நடைபெற்றது. அமரோஹா பகுதியில் நடைபெற்ற கொண்டாட்டத்தின்போது, ஒரு பெரிய கேக்கை அவரது ஆதரவாளர்கள் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். அப்போது மேடையில் இருந்த கேக்கை சுற்றியிருந்த பல ஆதரவாளர்கள் சண்டையிட்டு பிரித்து எடுத்துச் செல்வது போன்ற வீடியோ வெளியானது.

இந்த வீடியோ ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் கடும் விமர்சனத்துக்குள்ளாக்கபட்டது. இது குறித்து பேசிய மாயாவதி, "இந்த சம்பவத்தை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்குகிறார்கள். தலித் எதிர்ப்பு ஊடகங்களுக்கு இதில் ஒரு பிரச்சனை இருந்தால் இருக்கட்டும். எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை. சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் இடையே உள்ள கூட்டணி, பாரதிய ஜனதாவை பயப்பட வைத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தோற்று விடுவோம், என்ற பயத்தில் இதுபோல எங்களது உங்களது பெயரை கெடுக்க முயற்சி செய்கிறது பா.ஜ.க என தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close