எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மாநாடு: சந்திரபாபு நாயுடு திட்டம்

  Newstm Desk   | Last Modified : 22 Jan, 2019 10:20 am
chandra-babu-naidu-planning-mega-opposition-rally-in-amaravati

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டி, ஆந்திர மாநிலத்தின் தலைநகர் அமராவதியில் மாபெரும் மாநாடு நடத்துவதற்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார்.

முன்னதாக, இதுபோன்றதொரு மாநாட்டை மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் கடந்த சனிக்கிழமை நடத்தினார். அதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, அபிஷேக் மனு சிங்வி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு உள்பட நாடெங்கிலும் இருந்து 20க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சிகள் சார்பில் ‘மகா கூட்டணி’அமைப்பதற்கான அச்சாரமாக அந்த மாநாடு பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை மேலும் வலிமைப்படுத்தும் நோக்கில், அமராவதியில் மாபெரும் மாநாட்டை நடத்துவதற்கு சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார். இந்த மாநாடு பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில் தமிழகம், கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு பயணித்து, எதிர்க்கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து, அவர்களை ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சிகளை சந்திரபாபு நாயுடு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close