காங்கிரஸை கழற்றிவிட தயாராகும் லாலு கட்சி

  Newstm Desk   | Last Modified : 23 Jan, 2019 09:42 am
rjd-s-plan-b-to-contest-elections-without-alliance-with-congress

பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.), காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் இதர சிறிய கட்சிகள் இணைந்து மகா கூட்டணி அமைத்திருந்தன. ஆனால், இந்தக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை கழற்றிவட ஆர்.ஜே.டி. திட்டமிட்டு வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் பிரத்யேக கூட்டணி அமைத்து காங்கிரஸை தனித்து விட்டனர். அதேபோல, பீகாரில் தற்போது காங்கிரஸை கூட்டணியில் இருந்து கழற்றிவிட ஆர்.ஜே.டி. திட்டமிட்டு வருகிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. இதில், காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் போட்டியிட வேண்டும் என விரும்புகிறது. குறைந்தபட்சம் 12 தொகுதிகளுக்கு குறைவான இடங்களை ஏற்பதில்லை என்ற முடிவில் அக்கட்சி இருக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு 7 இடங்கள் மட்டுமே ஒதுக்குவதற்கு ஆர்.ஜே.டி. திட்டமிட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் சம்மதிக்காத பட்சத்தில் அக்கட்சியை கூட்டணியில் இருந்து கழற்றிவிடுவதற்கு ஆர்.ஜே.டி. தயாராகி வருகிறது. குறிப்பாக, காங்கிரஸ் அல்லாமல் கூட்டணி அமைத்த அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதியை, லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் அண்மையில் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close