உ.பி.,யை இரண்டாக பிரிக்க ராகுல் ஆலோசனை!

  Newstm Desk   | Last Modified : 27 Jan, 2019 01:19 pm
rahul-is-planing-to-divide-uttar-pradesh

உத்தர பிரேதச மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கூட்டணியிலிருந்து, காங்கிரஸ் கட்சி கழற்றிவிடப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் அந்த கட்சியை பலப்படுத்தும் முயற்சிகளில், அந்த கட்சியின் தலைவர் ராகுல் தீவிரமாக செயலாற்றி வருகிறார். 

அதன் ஒரு பகுதியாக, உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி பொதுசெயலராக தன் சகோதரி பிரியங்காவை நியமித்துள்ளார். மேற்கு பகுதி பொதுசெயலராக, ஜோதிராதித்ய சிந்தியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில், மாநிலத்தில் கட்சியை மேலும் வலுப்படுத்தவும், உட்கட்சி பூசலை தவிர்க்கவும், கட்சியின் அமைப்பு ரீதியில், உ.பி.,யை இரண்டாக பிரித்து, இரு மாநில தலைவர்களை நியமிப்பது குறித்து, ராகுல் ஆலோசித்து வருகிறார். 

இது குறித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கருத்து கேட்டுள்ள அவர், ஓய்வு முடிந்து கோவாவிலிருந்து திரும்பியதும், புதிய மாநில தலைவர்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என, அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close