நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு மம்தா அரசு காணாமல் போகும் - அமித் ஷா

  Newstm Desk   | Last Modified : 30 Jan, 2019 10:18 am
mamta-govt-will-fall-off-after-lok-sabha-elections-amit-shah

நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடியும் அதே வேகத்தில், மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா அரசு காணாமல் போகும் என்று பா.ஜ.க. தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலம், கன்தி என்னும் இடத்தில் பா.ஜ.க. சார்பில் நேற்றிரவு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அமித் ஷா பேசியபோது, மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு மீதும், முதல்வர் மம்தா பானர்ஜி மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

”மே மாத இறுதியில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நண்பகல் ஒரு மணிக்கு நிறைவடையும். அதே நேரத்தில் மம்தா அரசும் முடிவுக்கு வந்துவிடும். மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், நிதி நிறுவனங்களிடம் மக்கள் இழந்த பணம் திருப்பியளிக்கப்படும். மம்தா அரசைப் போல, துர்கா பூஜையும், சரஸ்வதி பூஜையும் தடுத்து நிறுத்தப்படாது. மேற்கு வங்கத்தில் இருந்து வங்கதேசத்துக்கு கால்நடைகளை கடத்திச் செல்வதை தடுக்கவும், மேற்கு வங்கத்துக்குள் ஊடுருவ நினைக்கும் வங்கதேசத்தவர்களை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close