ராஜஸ்தான், ஹரியானாவில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

  Newstm Desk   | Last Modified : 31 Jan, 2019 10:33 am
vote-counting-underway-in-jind-and-ramgarh-by-polls

ராஜஸ்தான் மாநிலத்தின் ராம்கார் சட்டப்பேரவைத் தொகுதிக்கும், ஹரியானா மாநிலம் ஜிந்த் சட்டப்பேரவை தொகுதிக்கும் நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இரு தொகுதிகளிலும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

முன்னதாக ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றபோது, ராம்கார் தொகுதியில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் வேட்பாளர் லக்‌ஷ்மண் சிங் உயிரிழந்தார். இதனால், அத்தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 78.9 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஜிந்த் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை தொடங்கி எண்ணப்பட்டு வருகிறது. ராம்கார் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், ஜிந்த் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரும் முன்னணியில் உள்ளனர். பிற்பகலுக்குள் இறுதி முடிவு தெரியவரும்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close