என் சமையல்காரரையும் கேள்வி கேட்பார்கள்: மம்தா ஆவேசம்

  Newstm Desk   | Last Modified : 02 Feb, 2019 12:30 pm
cbi-will-also-enquire-my-cook-mamata

சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கு தொடர்பாக, தன் தனி செயலரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தியதற்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்கத்தில், பொதுமக்களின் நிதி வசூலித்து சிட்பண்டு நடத்தி வந்த சாரதா நிதி நிறுவனம் மாேசடியில் ஈடுபட்டது. இது தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறையினர் பலரை கைது செய்துள்ளனர். இது குறித்த வழக்கு விசாரணை நடந்த வருகிறது. 

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வீட்டில் தனி செயலராக பணியாற்றும், மானிக் மஜும்தாரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். 

இந்த சம்பவத்திற்கு, மம்தா பானர்ஜி கடும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து, மம்தா கூறுகையில், ‛‛ மானிக்கிடம் விசாரணை நடத்திய அதிகாரிகளை நான் குறை கூறவில்லை. அவர்கள் வெறும் அம்புகள் தான். அந்த அம்புகளை ஏவிய பிரதமர் மோடி, எதிர்க் கட்சிகளை ஒடுக்க நினைக்கிறார். 

எங்களுடன் அரசியல் ரீதியாக மோத தயாராக இல்லாத பா.ஜ., தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பா.ஜ., அரசின் துாண்டுதலால், சி.பி.ஐ., அதிகாரிகள், என் சமையல்காரரிடம் கூட விசாரணை நடத்துவார்கள். அப்படி நடந்தால் கூட ஆச்சியப்படுவதற்கு இல்லை’’ என அவர் கூறினார். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close