பட்ஜெட் வெறும் ‛ட்ரைலர்’ தான்: பிரதமர் மோடி பேச்சு

  Newstm Desk   | Last Modified : 02 Feb, 2019 01:07 pm
budget-is-a-trailer-pm-modi

நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட் வெறும் ‛ட்ரைலர்’ தான்;  முக்கிய அறிவிப்புகள் இனிமேல் தான் வெளியாகும் என, மேற்கு வங்கத்தில் நடந்த பா.ஜ., தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மாேடி பேசினார். 

மேற்கு வங்க மாநிலம் தாக்குர்நகரில் நடந்த பா.ஜ., பிரசார பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மாேடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவ: ‛‛இங்கு குடியேறியுள்ள அகதிகளுக்கு, போதிய உதவிகளை செய்ய மாநிலத்தில் ஆளும் திரிணமுல் காங்., அரசு மறுக்கிறது. 

இங்குள்ள பலரும், அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் தவிக்கின்றனர். நாடு சுதந்திரம் அடைந்த போது, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் மேலும் சில அண்டை நாடுகளில் வசித்த, ஹிந்துக்கள், சீக்கியர்கள், பார்சிக்கள், ஜைனர்கள் இந்தியாவில் குடியேறினர். 

அவர்களில் பெரும்பாலானோர், மேற்கு வங்கத்தில் வசிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இந்திய குடியுரிமை வழங்குவதன் மூலம், அவர்கள் தங்கள் உரிமைகளை பெற முடியும். அதற்கான முயற்சியில் தான், பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. 

இளைஞர்கள், முதியவர்கள், ஏழை விவசாயிகள், பெண்கள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைத்து தரப்பினருக்கான திட்டங்களை, மத்திய அரசு செயல்படுத்த வருகிறது. எத்தனையோ பல நல்ல திட்டங்களை நிறைவேற்றியும் உள்ளது. 

மாநிலத்தை ஆளும், முதல்வர் மம்தா பானர்ஜி, ஊழல் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார். மாநில மக்கள் நலன் கருதியும், தேச முன்னேற்றத்திற்காகவும், மக்கள் பா.ஜ.,வை ஆதரிக்க வேண்டும்.

மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட், மத்திய தர வர்க்கத்தினரையும், ஏழை விவசாயிகளையும் கவரும் வகையில் உள்ளது. இது வெறும் ட்ரைலர் தான். இன்னும் பல முக்கிய அறிவிப்புகள் காத்திருக்கின்றன. 

2019 லோக்சபா தேர்தல் முடிந்த பின், தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்டில், பல்வேறு சிறப்பு அம்சங்கள் உடைய பல அதிரடி அறிவிப்புகள் இடம் பெறும்’’ என அவர் பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close