நாடு முழுவதும் வருகிற மார்ச் 2ம் தேதி பாஜக சார்பில் சைக்கிள் பேரணி நடத்தப்படும் என அக்கட்சியின் தேசிய செயலர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான அரசு போல எந்த அரசும், நாட்டின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு செயல்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு தமிழகத்தில் பாஜக தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது. தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு வரும்
வருகிற பிப்ரவரி 10ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, திருப்பூரில் மக்களை சந்தித்து பேச உள்ளார். பாஜக அரசு செய்த வளர்ச்சிப் பணிகளை போல், சுதந்திரம் அடைந்த பிறகு வந்த எந்த அரசும் செய்ததில்லை.
மேலும், நாடு முழுவதும் வருகிற மார்ச் 2ம் தேதி பாஜக சார்பில் சைக்கிள் பேரணி நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.
newstm.in