சமூக வலைதளங்களில் பிரியங்கா காந்தி பற்றி அவதூறு: காங்கிரஸ் புகார்

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 08:05 pm
congress-files-complaint-against-offensive-tweets-targeting-priyanka

காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை குறிவைத்து, சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்கள் பரப்பப்படுவதாக காங்கிரஸ் கட்சி, டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளது.

சமூக வலைதளங்களில் பிரியங்கா காந்திக்கு எதிராக, அவரது பெயரை களங்கப்படுத்தும் விதமாக, ஒரு அவதூறு பிரச்சாரம் நடந்து வருவதாக அனைத்திந்திய மகளிர் காங்கிரஸ், தரப்பில் இருந்து டெல்லி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

"அசிங்கமான, அவதூரான ட்வீட்டுகள், பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் ப்ரியங்கா காந்தியை குறிவைத்து சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இது போன்ற செயல்களே பெண்களை அரசியலுக்குள் நுழைய விடாமல் செய்கின்றன" என அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.  இதுபோல பல்வேறு மாநிலங்களில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close