ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்கள் மம்தா அரசுக்கு எதிராக போர்க்கொடி

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 10:33 am
we-betryaed-by-mamta-govt-loosed-investors-accusing-for-stopped-cbi

நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவதன் மூலமாக, மம்தா அரசு தங்களை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது என்ற பணத்தை இழந்த முதலீட்டாளர்களும், முகவர்களும் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தில், ரோஸ் வேலி, சாரதா சிட் பண்ட்ஸ் ஆகிய நிநி நிறுவனங்கள், அவர்களிடம் முதலீடு செய்திருந்த பொதுமக்களின் பல ரூபாய் பணத்தை மோசடி செய்தன. இதுதொடர்பாக மாநில காவல்துறை நடத்திய விசாரணையின்போது, வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முயற்சித்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாறியது. கொல்கத்தா மாநகர காவல்துறை கமிஷனரை இதுதொடர்பாக விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். அதே சமயம், சிபிஐ நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இத்தகைய சூழலில், நிதி நிறுவனங்களில் பணத்தை பறிகொடுத்த முதலீட்டாளர்கள் மம்தா அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஸீம் சாட்டர்ஜி இதுதொடர்பாக கூறுகையில், ”காவல்துறையை அதிகாரியை சிபிஐ விசாரிக்க விடாமல் தடுப்பது, உண்மையை மறைப்பதற்கான முயற்சியாகும்’’ என்றார். மற்றொரு ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தா ஹல்தார் கூறும்போது, “நிதி நிறுவனத்தில் முகவராக பணியாற்றிய அதே சமயம் நானே முதலீடு செய்திருக்கிறேன். என்னுடைய பணம் மட்டுமே ரூ.30 லட்சம் மோசடி செய்யப்பட்டுவிட்டது. இப்போது சிபிஐ உண்மையை கண்டறிய முற்படும்போது மாநில அரசு அதற்கு முட்டுக்கட்டை போடுகிறது. அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட வேண்டும்’’ என்றார் அவர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close