100% வாக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும் - உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 11:37 am
vvpat-machines-in-poll-booths-election-commision-tells-court

நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிவதற்கான வாக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெறுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. தேர்தல் ஆணையம் அதை திட்டவட்டமாக மறுத்து வந்தது. அதே சமயம், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்வதற்கான ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரத்தை, அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

முன்னதாக, தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் குறைந்தபட்சம் 50 சதவீதமாவது ஒப்புகைச்சீட்டு வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று டெல்லியில் நேற்று தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் மனு கொடுத்திருந்தன. ஆனால், ஒப்புகைச் சீட்டு 100 சதவீதம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close