அரசியலில் குதிக்கிறார் அதிரடி நாயகன் சேவாக்?

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 12:15 pm
cricketer-shewag-is-ready-to-contest-in-loksabha-election

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரரும், சிக்சர்களால் எதிரணியை துவம்சம் செய்தவருமான வீரேந்திர சேவாக், வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர்களுள் ஒருவராக திகழ்ந்த சேவாக், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின், ஐ.பி.எல்., போட்டிகளில் பங்கேற்று வந்தார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில், தனியாக, பள்ளி மற்றும் கிரிக்கெட் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். 

இந்நிலையில், சேவாக்கை தங்கள் கட்சியில் சேர்த்துக் கொண்டு, வரும் லோக்சபா தேர்தலில், ஹரியானா மாநிலம் ரோத்தக் தொகுதியில் களம் இறக்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து, ஹரியானா மாநில பா.ஜ.,வினர், சேவாக்கிடம் பேச்சு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, முன்னாள் கிரிக்கெட் வீரர், அசாருதீன், காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு, லோக்சபா எம்.பி.,யானார். மற்றொரு வீரரான சச்சின், குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகிேயார், ராஜ்யசபா எம்.பி.,க்களாக நியமிக்கப்பட்டனர். 

தெலுங்கு நடிகர் பிரபாஸை, பா.ஜ., சார்பில் ஆந்திராவில் போட்டியிட வைக்கும் முயற்சிகளும் நடப்பதாக கூறப்படுகிறது. நடிகர் பிரகாஷ் ராஜ், பெங்களூரில், சுயேட்சையாக போட்டியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வரிசையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்கையும், அரசியல் களத்திற்குள் இழுக்கும் முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது. 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முன்னாள் முதல்வர் பூபேந்திர சிங் ஹுட்டாவின் மகன், தீபேந்திராவை எதிர்த்து, ரோத்தக் தொகுதியில், சேவாக் களம் இறக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

அப்படி அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றால், கிரிக்கெட்டை போலவே, அரசியல் களத்திலும் ஒரு கலக்கு கலக்குவார் என, அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close