மேற்கு வங்கம் - பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 12:29 pm
west-bengal-former-ips-officer-joins-bjp

மேற்கு வங்க மாநிலத்தில் முன்னாள் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி பாரதி கோஷ், பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமான அதிகாரியாகக் கருதப்பட்ட அவர், தற்போது பா.ஜ.க.வில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க. மூத்த தலைவர்கள் விஜய் வார்கியா, முகுல் ராய், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் அவர் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரதி கோஷ், மேற்கு வங்கத்தில் ஜனநாயகமே இல்லை என்று தெரிவித்தார். குண்டர்கள் ஆட்சி, குற்றவாளிகளின் ஆதிக்கம் ஆகியவையே மேற்கு வங்கத்தில் எதிரொலித்து வருவதாகவும் அவர் கூறினார்.  வரும், நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் பாரதி கோஷ் போட்டியிடக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி 2011இல் ஆட்சியை பிடித்த சமயத்தில், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலமாக பிரபலமானவர் பாரதி கோஷ். அதற்காக மாநில அரசின் விருதுகளையும் பெற்றார். பின்னர், மம்தாவுடன் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மிரட்டி பணம் பறித்ததாக வழக்கு ஒன்று பாரதி கோஷ் மீது நிலுவையில் உள்ளது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close