பா.ஜ., முதல்வர் உடல் நிலை கவலைக்கிடம்: துணை சபாநாயகர் தகவல்

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 02:50 pm
parikkar-s-health-condition-is-not-stable-dy-speaker


டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, கோவா முதல்வர் மனோகர் பரீக்கர் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக, அந்த மாநில துணை சபாநாயகர், மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார். 

பா.ஜ.,வை சேர்ந்த, கோவா முதல்வர் மனோகர் பரீக்கர், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இந்நிலையில், முதல்வரின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், கோவா அரசியலில் ஸ்திரத்தன்மையற்ற சூழல் ஏற்படும் என, பா.ஜ.,வை சேர்ந்த மூத்த தலைவரும், மாநில துணை சபாநாயகருமான, மைக்கேல் லோபோ கருத்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து, லோபோ மேலும் கூறியதாவது: ‛‛ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், முதல்வர் பரீக்கரின் உடல் நிலை மிகவும் மாேசமாக உள்ளது. கடவுளின் கருணையால் அவர் உயிர் வாழ்கிறார். உடல் நலக்குறைவால் அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகினாலோ அல்லது அவரின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தாலோ, மாநில அரசியலில் பெரிய குழப்பம் ஏற்படும்’’ என அவர் கூறினார். 

மாநிலத்தில், சிறிய கட்சிகள், சுயேட்சைகளின் ஆதரவுடன், பா.ஜ., தலைமையிலான ஆட்சி நடக்கிறது. முதல்வர் பதவியிலிருந்து பரீக்கர் விலிகினால், அந்த பதவியை பிடிப்பதில் எழும் போட்டியால், அந்த மாநிலத்தில் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

இதற்கிடேயே, பரீக்கர் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக, எய்ம்ஸ் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close